சனி, 30 ஜனவரி, 2016

காந்தி -2

சத்தியம் செத்ததோ 
‘கல்கி’
ஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்.

மகாத்மா 1948-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ எழுதிய கட்டுரை இதோ!
[ நன்றி : கல்கி, பாவை பப்ளிகேஷன்ஸ்  ]

அடுத்த வார ’விகட’னின் அட்டைப்படம்:
தொடர்புள்ள பதிவுகள்: 

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்வெள்ளி, 29 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 68

வி.வி.சடகோபன் -5

காத்தானும் கிரேக்க சங்கீதமும் !
ஜனவரி 29. சங்கீத வித்வான் பேராசிரியர் வி.வி.சடகோபனின் 

பிறந்ததினம்.

தினமணி கதிரில் வெளியான ஒரு கட்டுரை இதோ! 
[ நன்றி : தினமணி கதிர் ]


தொடர்புள்ள பதிவுகள்:


வி.வி.சடகோபன் 


சங்கீத சங்கதிகள் 


Vidwan V V Sadagopan 78RPM recordings

VV Sadagopan - His Legacy Our Mission 


செவ்வாய், 26 ஜனவரி, 2016

முதல் குடியரசு தினம் -1

கட்டுரை, கவிதை, சித்திரம் ... 
ஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. ( மற்ற இதழ்கள் மலர்கள் வெளியிட்டனவா? எனக்கு நினைவில்லை.)

அவற்றிலிருந்து சில பகுதிகளை முன்பே இங்கிட்டிருக்கிறேன்:

எங்கள் பாரத நாடு!

குடியரசுக் கொண்டாட்டங்கள் !

இப்போது அந்த மலரிலிருந்து : ஒரு கட்டுரை ( கல்கி எழுதிய தலையங்கம்) , கவிதை ( கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ), ”சாமா”வின் சித்திரங்கள் ஆகிய ஒரு தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவு:

சனி, 23 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 67

அய்யங்காரின் பிளேட் 
‘கல்கி’  
ஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் நினைவு தினம்.

அந்த நினைவில் ‘கல்கி’ விகடனில் அய்யங்காரின் இசைத்தட்டைப் பற்றி ( 30 -களில் ) எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை இங்கிடுகிறேன்.
=====

தென்னிந்தியாவிலுள்ள தற் கால வித்வான்களில் சிலர் இசைத்தட்டுகளின் மூலம் தங்கள் புகழைப் பெருக்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ, இசைத்தட்டுக் கொடுத்த பின்னர், தங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயரையும் இழந்து விட்டார்கள். இன்னும் சிலருடைய கீர்த்தி இசைத்தட்டுகளினால் அதிகமும் ஆகவில்லை; குறைவு படவுமில்லை.

அரியக்குடி இராமனுஜ அய்யங்கார் இவற்றுள் மூன்றாவது கோஷ்டியைச் சேர்ந்தவர். அவர் கிராமபோன் பிளேட் கொடுப்பதற்கு முன்னாலேயே சங்கீத உலகில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அதற்கு மேல் உயர்வதற்கு இடமேயிருக்கவில்லை. ஏறக்குறைய பதினைந்து வருஷ காலமாக அவருடைய புகழ் மங்காமல் இருந்து வருகிறது. அந்தப் புகழை அவருடைய இசைத்தட்டுகள் அதிகமாக்கவுமில்லை; குறைவு படுத்தவுமில்லை. ஆனால் நிலைபெறுத்தி யிருக்கின்றன.

அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் சென்ற பதினைந்து வருஷத்தில் அநேக தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால் சங்கீதத்தில் மட்டும் அய்யங்காரின் தலைமை இன்னும் நீடித்திருப்பதின் இரகசியம் என்ன? பண்டிதர்கள், பாமரர்கள் எல்லாரையும் ரஞ்சிப்பிக்கக்கூடிய சில அம்சங்கள் அய்யங்காரின் பாட்டில் அமைந்திருப்பதுதான்.
[ ஓவியம்: மாலி, நன்றி: விகடன் ]

அய்யங்காருக்கு முந்திய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளுக்கு வந்து ரஸித்தவர்கள் பெர்ம்பாலும் அந்த வித்தையின் நுட்பங்களை அறிந்த சிலரேயாவர். மற்ற சாதாரண ஜனங்கள் சங்கீதம் அநுபவிப்பதற்கு நாடக மேடையை நாடி வந்தார்கள். சங்கீத நுட்பங்களை அறியாத சாதாரண ஜனங்களும் ரஸித்து அனுபவிக்கும்படியாகக் கச்சேரி பந்தாவை அமைத்தவர் அய்யங்கார் என்றே சொல்லவேண்டும். சின்னச் சின்னக் கீர்த்தனைகளாக உருப்படிகள் அதிகமாகப் பாட ஆரம்பித்தவர் அவரே. கச்சேரியில், வித்தைத் திறமையே பிரதான அம்சமாகவுடைய பகுதிக்குக் காலத்தைக் குறைத்து, எல்லாரும் அநுபவிக்கக் கூடிய பகுதியை அவர் நீட்டிவிட்டார். கச்சேரியின் கடைசியில், துக்கடாக்கள்  அதிகமாகப் பாடினார். கீர்த்தனைகளையும், ராகங்களையும் ஒரே சிட்டையாகப் பாடிவந்தபடியால், கொஞ்சநஞ்சம் சங்கீத ஞானமுள்ளவர்கள் எல்லோரும் அவரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். ஏகலைவன் துரோணாச்சாரியாரிடம் சிஷ்யனாயிருந்தது போல், அவருடைய கச்சேரிகளைக் கேட்பதின் மூலமாகவே அவருக்கு ஆயிரக் கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டனர்.

சங்கீத வித்தையில் ஆழ்ந்த தேர்ச்சியில்லாதவர் யாராவது இப்படிப்பட்ட புரட்சி செய்ய முயற்சித்திருந்தால் பண்டிதர்கள் சண்டைக்கு வந்திருப்பார்கள். “போச்சு! குடிமுழுகிப் போச்சு! “ என்பார்கள். ஆனால் அய்யங்காரிடம் அவர்கள் ஜபம் ஒன்றும் சாயவில்லை  

தென்னாட்டில் நமது காலத்தில் உயர்ந்த சங்கீத ஞானம் விஸ்தாரமாகப் பரவுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்களில் தலை சிறந்தவர் யார் என்று கேட்டால், ‘அய்யங்கார் தான்’ என்று திட்டமாகச் சொல்லலாம்.

ஆனால், கச்சேரிகளில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் ஒருவரிடம் இருந்தாலும், இசைத் தட்டுகளில் அவர் பாட்டு சோபிக்காமல் போகலாம். இசைத்தட்டில் வெற்றி பெறுவதற்குச் சில தனி அம்சங்கள் இருக்கவேண்டும். முக்கியமானது சாரீரம். கச்சேரிகளில் வெகு நன்றாய்ச் சோபிக்கும் சாரீரம் சில சமயம் பிளேட்டில் சுகப்படுவதில்லை. அடுத்தபடியாக, உச்சரிப்பு. கசேரிகளில் பாடகர் சில சமயம் வார்த்தைகளை விழுங்கிவிட்டால் நாம் அதைப் பிரமாதப் படுத்துவதில்லை.பக்க வாத்தியங்களின் முழக்கம், குழந்தைகளின் அழுகைச் சத்தம் இவைகளுக்கிடையே  அநேகமாய்ப் பாட்டின் வார்த்தைகள் தான் நம் காதில் விழுவதேயில்லையே? சங்கீதக் கச்சேரியில் ஸ்வரங்கள் ஆகட்டும், வார்த்தைகள் ஆகட்டும்  காதில் விழாத இடங்களில் எல்லாம், நம்முடைய மனோ பாவத்தினால்   இட்டு நிரப்பிக் கொள்ள நாம் தயாராயிருக்கிறோம்.

ஆனால் இசைத் தட்டுகளில் அப்படியில்லை. எந்தப் பிளேட்டில்  வார்த்தைகளும் ஸ்வரங்களும் சுத்தமாய்க் காதில் விழுந்து, அந்தப் பிளேட்டிலிருந்தே பாட்டைக் கற்றுக் கொள்ளும்படியிருக்கிறதோ அத்தகைய பிளேட்டுகளைத்தான் ஜனங்கள் விரும்பி வாங்குவார்கள்.

மேலும், சாரீரத்திலும் ஸாஹித்யத்திலும் உள்ள குறைபாடுகள் எல்லாம் கச்சேரியில் பாடும்போதை விடப் பிளேட்டில் நன்றாக எடுத்துக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அய்யங்காரிடம் எத்தனையோ தடவை

“ சிதம்பரம் என மனங்கனிந்திட” 

என்னும் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அதில் விரஸம் ஒன்றும் புலப்பட்டதில்லை.பிளேட்டில் அதே பாட்டைப் பாடுகையில்,

அடைக்கலமென் -றடியேன் உனை நம்பி
அலறுவதும் செவி புகவிலையோ - அடிமை” 

என்னும் அநுபல்லவியில்  “றடியேன்”  என்று அய்யங்கார் இரண்டு தடவை சொல்லுபோது கஷ்டமாய்த்தானிருக்கிறது.

இந்த இடத்தை ஒரு விதிவிலக்கு என்றே சொல்லலாம். பொதுவாக அய்யங்காரின் சங்கீதம் இந்த இசைத்தட்டு சோதனையில் வெற்றியடைந்திருக்கிறது. அவருடைய கச்சேரிகளில் நாம் அநுபவிக்கும் நல்ல அம்சங்களையெல்லாம் அவருடைய பிளேட்டுகளில் காண்கிறோம். உண்மையில், அய்யங்காரின் உயர்த்ரக் கச்சேரி ஒன்றை ராகம் பல்லவி மட்டும் இல்லாமல் கேட்க விரும்பினோமானால், அவருடைய பிளேட் ஸெட் ஒன்றை வாங்கிக் கொண்டால் போதும். தெலுங்கிலும், தமிழிலும், அவர் வழக்கமாகப் பாடும் சிறந்த கீர்த்தனங்களும், ஜாவளி, ஹிந்துஸ்தானி, துக்கடாக்களும் அவருடைய பிளேட்டுகளில் அடங்கியிருக்கின்றன.

பின்வரும் ஒன்பது பிளேட்டுகள், கிராமபோன் வைத்திருக்கும்  சங்கீத ரஸிகர்  ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டுமென்று நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

A.122 எடு நம்மினா ஸாவேரி 
        கமலாம்பாம் பஜரே  கல்யாணி
A.120 பரிதான மிச்சிதே   பிலஹரி
A.124 பரம பாவன ராம பூரி கல்யாணி 
A.109 கார்த்திகேய காங்கேய  தோடி
A.114 அலகலல்ல  மத்யமாவதி 
        அனுபமகுணாம்புதி  அடாணா 
A.111  சிதம்பரம்  என கல்யாணி 
        கடைக்கண் நோக்கி தோடி 
A.107  ராட்டினமே காந்தி       காபி
A.119  அவனன்றி ஓரணுவும்  ராகமாலிகை 
A.126 வைஷ்ணவ ஜனதோ   ஸிந்துபைரவி  

மேற்சொன்ன பிளேட்டுகளில் சில நன்றாயிருக்கின்றன. சில ரொம்ப நன்றாயிருக்கின்றன. “அசாத்தியமாய் நன்றாயிருக்கிறது” என்று சொல்லக் கூடிய அய்யங்காரின் பிளேட் இனித்தான் வெளியாகவேண்டும் , கூடிய சீக்கிரம் வெளியாகுமென்று எதிர்பார்க்கிறேன்.

மேற் குறிப்பிட்ட இசைத்தட்டுகளில் ஒன்று மட்டும் அய்யங்காரின் புகழ் என்றைக்கும் அழியாமல் இருக்கச் செய்யக் கூடியதாகும். அதுதான் “வைஷ்ணவ ஜனதோ”  என்ற பாட்டு. மகாத்மா காந்தியின் மனதுக்கு உகந்த கீதம் என்பதாக, தேசத் தொண்டர்களால் தேசிய பஜனைகளில் அடிக்கடி அது பாடப்படுவதுண்டு. அநேகமாக அபஸ்வர களஞ்சியமாய்த்தான் இருக்கும். அந்த கீதத்தை சங்கீத மேன்மை பொருந்தியதாகச் செய்து வெகு அழகாய்ப் பாடியிருக்கிறார் அய்யங்கார். முதலில் ஆலாபனமே மிக நன்றாயமைந்திருக்கிறது. பிறகு பல கண்ணிகள் அமைந்த அந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்குத் துளிக்கூட அலுப்புத் தோன்றா வண்ணம் வித விதமான வேலைப்பாடுகளுடன் பாடியிருக்கிறார். மகாத்மாவுக்குப் பிரியமான பாட்டு, ஒருவருடைய சங்கீதக் காதுக்கும் பிரியமளிப்பது என்றால் வேறு என்ன வேண்டும்?  ஆகவே, அய்யங்காரின் இசைத் தட்டுகளுக்குள்  “வைஷ்ணவ ஜனதோ “ வுக்குத்தான், இப்போதைக்கு, நான் முதன்மை ஸ்தானம் அளித்திருக்கிறேன்.

[ நன்றி : ஆனந்தவிகடன் ; கல்கி களஞ்சியம் ( வானதி ) ]

தொடர்புள்ள பதிவுகள் 

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! 

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

சனி, 9 ஜனவரி, 2016

பதிவுகளின் தொகுப்பு: 326 - 350


பதிவுகளின் தொகுப்பு: 326 - 350 


326. திரு.வி.க -1
அன்புருவான திரு.வி.க.
கி.வா.ஜகந்நாதன்

327. பதிவுகளின் தொகுப்பு: 301 – 325

328. கல்கி -9
கல்கியின் நகைச்சுவை -2

329. சாவி -14: 'நர்ஸ்' நாகமணி
'நர்ஸ்' நாகமணி

330. ம.பொ.சி -2
மீசைக்காரர் சிவஞானம்
கொத்தமங்கலம் சுப்பு

331. கல்கி -10
கல்கியின் நகைச்சுவை -3

332. சங்கீத சங்கதிகள் - 56
 பண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்
உ.வே.சாமிநாதய்யர்

333. சங்கீத சங்கதிகள் - 57
பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன்

334. கல்கி -11
கல்கியின் நகைச்சுவை -4

335. சங்கீத சங்கதிகள் - 58
மங்கள தீபாவளி
பாபநாசம் சிவன்

336. தமிழ்வாணன் -1
கிழக்காசியப் பேரெழுத்தாளர்
விக்கிரமன்

337. தினமணிக் கவிதைகள் -1
மழை(1) முதல் சினிமா(5) வரை!

338. அரியும் அரனென் றறி : கவிதை
அரியும் அரனென் றறி

339. ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் !


340. பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3
விதியின் விசித்திர கதி
பி.ஸ்ரீ 

341. நா.பார்த்தசாரதி -1
 ‘தீபம்பார்த்தசாரதி
சி.சு.செல்லப்பா
டிசம்பர் 13. ‘தீபம்நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.

342. சங்கீத சங்கதிகள் – 59
இசைக் கலையின் அற்புதம்
கல்கி

343. சங்கீத சங்கதிகள் - 60
எம்.எஸ். அளித்த நிரூபணம்
கல்கி

344. ராஜாஜி - 2
இந்த உலக மன்றம் தனிலே
ஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு   

345. சங்கீத சங்கதிகள் - 61
சங்கீத சீசன் : 1956 - 1

346. சங்கீத சங்கதிகள் - 62
சங்கீத சீசன் : 1956 -2 

347.  சங்கீத சங்கதிகள் - 63
சங்கீத சீசன் : 1956 -3

348. சங்கீத சங்கதிகள் - 64 
சங்கீத சீசன் : 56 -4
நாரதர் விஜயம்
சுப்புடு


349. சங்கீத சங்கதிகள் - 65
சங்கீத சீசன் : 56 -5
இசை விழாவில் தெய்வக் குழல்
சாவி

350. சங்கீத சங்கதிகள் - 66
 என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி
தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 6 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 66


 என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி

ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள். 


1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ: 
=============

சுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

[ நன்றி: விகடன் ] 

''ஐயா! குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். 

[நன்றி: விகடன் ]

திரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.
[நன்றி: விகடன் ] 

எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.

ஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி! நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.

சில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். 

திரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


வெள்ளி, 1 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 65

சங்கீத சீசன் : 56 -5

இசை விழாவில் தெய்வக் குழல் 

சாவி 

இது  ‘கல்கி’யில் வந்தது;  56-சீசனைப் பற்றிய  கடைசிக் கட்டுரை இது . கூடவே நாகஸ்வரக் கலைஞர்களின் அரிய படங்கள்.

[ நன்றி : கல்கி ]


தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53: 1 ; சீஸன் 53: 2  ; சீஸன் 53 : 3

சீசன் 54 : 1 ; சீஸன் 54: 2 ; சீஸன் 54 -3


சீஸன் 55-1 ; சீஸன் 55-2 

சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2   ; சங்கீத சீசன் : 1956 -3  ;
சங்கீத சீசன் : 1956 -4
சங்கீத சங்கதிகள்